தூரத்தில் உன்னை கண்டேன்
அந்த நேரத்தில் உள்ளம் இழந்தேன்.
தூரத்தில் உன்னை கண்டேன்
அந்த நேரத்தில் உள்ளம் இழந்தேன்
கனவினில் வருவதென்ன
என் நினைவினில் நிறைவதென்ன...
ம்ம் ம்ம்
காலம் என்னும் தேவன்
உன்னைக் கண்ணில் காட்டினான்
காலம் என்னும் தேவன்
உன்னைக் கண்ணில் காட்டினான்...
ம்ம் ம்ம்
காதல் என்னும் தேரில்
நம்மைச் சேர்த்து ஏற்றினான்...ஓ
இளமையின் விளையாட்டு
இனி இனிமையின் தாலாட்டு
இளமையின் விளையாட்டு
இனி இனிமையின் தாலாட்டு
ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
மனம் ஆனந்த ராகம் பாடும்
ம்ம் ம்ம்
தூரத்தில் உன்னை கண்டேன்
அந்த நேரத்தில் உள்ளம் இழந்தேன்
கனவினில் வருவதென்ன
என் நினைவினில் நிறைவதென்ன...
ம்ம் ம்ம்
தீயில் செய்த பூவே
இந்த மோகம் என்பதோ
தீயில் செய்த பூவே
இந்த மோகம் என்பதோ
..ம்ம் ம்ம்
பூவை சூடிக்கொண்டேன்
எந்தன் தேகம் தாங்குமோ
...ஓ
தொடங்கட்டும் சீராட்டு
உன் வாலிப பாராட்டு
தொடங்கட்டும் சீராட்டு
உன் வாலிப பாராட்டு
அணைத்தால் போதும் குளிர்வேன்
உன் ஆயிரம் ஆசைகள் புரிவேன்
...ம்ம் ம்ம்
தூரத்தில் உன்னை கண்டேன்
அந்த நேரத்தில் உள்ளம் இழந்தேன்.
தூரத்தில் உன்னை கண்டேன்
அந்த நேரத்தில் உள்ளம் இழந்தேன்
கனவினில் வருவதென்ன
என் நினைவினில் நிறைவதென்ன...
ம்ம் ம்ம்
Song by - Young Poet
Post a Comment