-->

Samudhra Meetup Memories - June 2025

சமுத்ரா இசை குடும்பத்தின் 8வது மீட்அப் நிகழ்ச்சி 2025 மே 25ம் தேதி கோவை பிளாசா இன் ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது காலை 9 மணிக்கு இனிதே துவங்கிய இந்நிகழ்ச்சியில் முப்பது ஐந்திற்கும் மேற்பட்ட பாடகர்கள் கலந்து கொண்டு பல  ஜனரஞ்சகமான பழைய மற்றும் புதிய பாடல்களை பாடி மகிழ்ந்தனர், கலந்துக்கொண்ட அனைவருக்கும் சுவையான சைவம்  மற்றும் அசைவ உணவுகள் பஃபே முறையில்  வழங்கப்பட்டது. மேலும் காலை மாலை இடைவேளைகளில் மசாலா தேனீர் மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது, மாலை 7 மணி வரை நண்பர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் படு ஜோராக ஆட்டம் பாட்டத்தோடு கண்டுகளித்தனர், இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அத்துனை இசை நண்பர்களுக்கு சமுத்ரா குடும்பத்தின் சார்பாக தன் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

அடுத்த இசை இந்நிகழ்ச்சிகளில் விவரம் இந்த வலைத்தளத்திலும் நமது வாட்ஸாப்ப் குழுவிலும் அறிவிக்க படும். அழகான சில நினைவலைகள் இதோ.

starmaker samudhra family meetup
SAMUDHRA FAMILY MEETUP - COIMBATORE

டாக்டர். நித்தி அவர்கள் . மற்றும் கவிதகவி 

அற்புதமான பல பாடல்க்ளை பாடி அசர வைத்தார்கள் திரு.ராக ஜோதி மற்றும் கச்சேரி பாடகி திருமதி. தனா சிவா அவர்கள்.  

இசை நிகழ்ச்சிகளுக்கு பாடகர் பாடகி  

கவிதாகவி அவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வழங்கியவர் திரு.ராக ஜோதி. 

விழாவிற்கு வந்திருந்த அனைவர்க்கும் உயர்தர சைவம் மற்றும் அசைவ உணவு பரிமாறப்பட்டது..

விழாவில் கலந்து கொண்டவர்கள் மன நிறைவோடு வாழ்த்தியது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று விழாவின் ஒருங்கிணைப்பாளர் திரு.ராகஜோதி தெரிவித்தார்.  

மதிப்பிற்குரிய திருமதி.ஷோபா காற்றே எங்கள் அழைப்பை ஏற்று விழாவில் கலந்துகொண்டதோடு. விழா முழுவது கண்டு ரசித்து பாடகர்களை ஊக்கபடுத்தினார்.  அவருக்கு திரு.ராகஜோதி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.  

Dr Nithy,  Divya, Raaga Jothi, Sivakumar  starmaker meetup
அழகான பல பாடல்களை பாடி அங்கு வந்திருந்த அனைவரையும் ஈர்த்த பாடகி திவ்யா அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் மற்றும் நினைவு கேடயம் வழங்க பட்டது.   அப்போது  திரு.ராகஜோதி, டாக்டர்.நித்தி, திரு.சிவகுமார் உடன் இருந்தார்கள் .

நிறைந்த நிறைந்த குதூகுலத்தோடு நிறைவு பெற்ற விழாவின் முடிவில் குழுவாக அமர்ந்து நிழற்படம் எடுத்து. அவர் அவர் ஊர் திரும்பினார் மகிழ்வாக.

மேலும் இது போன்ற இசை நிகழ்வில் கலந்து கொள்ள மீட்டப் ஸ்டேஜ் வலைதளத்தை subscribe செய்து கொள்ளவும் அல்லது வாட்ஸாப்ப் சேனல் இணைத்து அவ்வப்போது இசை சார்ந்த விஷயங்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

விழா ஒருங்கிணைப்பு :  RJ REHERSAL STUDIO   

செய்திகள் சேகரிப்பு மற்றும் பதிவேற்றம் : திரு.குரு கௌஷிக் , 

மேலும் உங்கள் நிகழ்வுகள் இங்கே பதிவேற்றம் செய்ய  திரு.கார்த்திக் அவர்களுக்கு  9943070595 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் அனுப்பலாம். 





Post a Comment

Previous Post Next Post