-->

How to Calculate Starmaker Smule Music Events Charges

நீங்களும் இசை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் ஆக வேண்டுமா?

நமது மீட்டப் ஸ்டேஜ் உங்களுக்காக வழிகாட்ட தயாராக உள்ளது.


முதலில் இசை நிகழ்வு எதற்காக நடத்த வேண்டும்?

ஸ்மூல் மற்றும் ஸ்டார் மேக்கர் போன்ற குறுஞ்செயலிகளில் நாம் எவ்வளவு தான் திறம் பட பாடினாலும். நமது பெயர் பாத்ரூம் சிங்கர் என்று தான் அர்த்தம் கொள்ள படுகிறது.  அதே சமயம் ஒரு மேடை ஏறி, ஹெட் போன் இன்றி மைக்கை பிடித்து, அனைவர் முன்னிலையிலும் பாடும் பொது தான் நாம் மேடை பாடகராக மாறுகிறோம். 

இசை என்பது தானும் இன்புற்று பிறரையும் இன்புற செய்வது என்ற அடிப்படையில், முன்னாள் அமர்ந்து இருக்க கூடிய மக்களை நமது குரலால் மகிழ்விக்கிற பொழுது நாம் சிறந்தபாடகர் என்கிற இடத்தில இருந்து சிறந்த கலைஞர் என்கிற அந்தஸ்தை பெறுகிறோம்.  எனவே மேடை ஏறி பாடுவது நம் போன்ற இசை கலைஞர்கள் அனைவர்க்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்பு.


வியாபார நோக்கம்?

வெகு சிலர் இசை நிகழ்வுகளை வியாபாரமாக லாப நோக்கோடு செய்கிறார்கள். அதில் இசை வளர்வது இல்லை. அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்பு எப்படி இருந்ததோ உங்கள் ஞானம் அதே போன்று தான் வெளியே வரும் போதும் இருக்கும். எந்த ஒரு செயல் செய்தலும் கடுகளவு முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பது தான்  எனது கருத்து. 

ஆக, இசை நிகழ்வினை,  சிலர் வியாபாரமாக செய்வதற்கான காரணம்,  இசை நிகழ்வுகள் நடத்துவது என்பது 

கடினம் என்கிற உங்கள் மனப்பான்மை.  அதற்கான புரிதலை தருவதற்கான பதிவு தான் பின்வரும் தகவல்கள்.


இசைநிகழ்விற்கு தேவையான விஷயம்.

  1. இசை கருவிகள், 
  2. சவுண்ட் சிஸ்டம்
  3. சான்றிதழ் 
  4. நினைவு பரிசு 
  5. உனவு மற்றும் நொறுக்கு தீனி, 


1. இசை கருவிகள், சவுண்ட் சிஸ்டம்

நடைமுறையில் எல்லோராலும் இசை கருவிகள் வாங்குவதும், சவுண்ட் சிஸ்டம் முதலீடு செய்வதும் கடினம் எனவே  தான் ரெஹெர்ஸல் ஸ்டூடியோ இருக்கிறது. மிக குறைந்த வாடகையில் கிடைக்கிறது, சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 500 முதல் 1000 வரை வாடகை கிடைக்கும். 


2. சான்றிதழ் 

இசை நிகழ்விற்கு வந்து கலந்து கொண்டவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தும் போது மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். தொடர்ந்து உங்கள் நிகழ்வில் கலந்து கொள்வார்கள். 

ஏ4 சைஸ் - பிரின்டிங். ரூபாய்.10 முதல் பேப்பர் குவாலிட்டி (டெக்சர் போர்டு, கோல்ட் பேப்பர்) பொறுத்து விலை மாறுபடும். இருப்பினும் frame செய்து கொடுக்கிற பொது ருபாய்.150 மேல் வரும்.  டிசைனிங் மற்றும் பிரின்டிங் நீங்கள் முன்னரே செய்து வைத்து கொண்டால் நல்லது. கலந்து கொள்வோர் பட்டியல் இருந்தால்  முன்னரே தயார் செய்யலாம். இசை நிகழ்வன்று சிலர் கலந்து கொள்வதுண்டு, அந்த பாடகர்கள் பெயர் மட்டும் எழுதி கொடுக்கும் படி பெயர் இல்லாத சான்றிதழ் சில எண்ணிகை  பிரிட்டிங் செய்து வைத்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு மீட்டப் ஸ்டேஜ் அணுகலாம்.


3. நினைவு பரிசு

ரூபாய் 100முதல் ருபாய் 300 வரை வாங்கலாம்.  போட்டி என்கிற பட்சத்தில் முதல் பரிசு இரண்டாம் பரிசு என்று வித்யாசம் வேண்டும் என்பதால் இன்னும் சற்று விலை உயர்ந்த பரிசு பொருள் வாங்கலாம். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என்பதால் விலை குறைந்து வாங்கிக்கொள்ளலாம். இதனால் டிக்கெட் விலை சற்று குறையும்.


4. உனவு மற்றும் நொறுக்கு தீனி

முக்கியமான பகுதி இது தான், சோறு தான் முக்கியம் என்பது போல்.  உணவு சப்ளை செய்ய பல கேட்டரிங் சேவைகள் இருந்தாலும்,  சில ஹோட்டலில் உணவு ஆர்டர் கொடுக்கிற போது ஹால் இலவசமாக தரப்படும்.

நிச்சயம் மறைமுக கட்டணம் இருக்கும்.  நண்பர்களாக இணைத்து நடத்துகின்ற நிகழ்ச்சிக்கு,,,உங்கள் முதல் தேர்வாக ஸ்டூடியோ இருக்கட்டும். 

உணவு வகைகள்  - சிலர் அசைவம் சைவம் என்று உணவு உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும் என்றும் நினைவு கொள்கிறோம்.  உண்மையில் பாடும் போது எளிமையான உணவு பழசாறு மட்டுமே உண்ண வேண்டும். சரி நண்பர்களோடு இணைத்து உணவு உண்ணுகிற பொது மன மகிழ்ச்சிக்காக ஒரு வரைமுறை வரை செலவழிக்கலாம்.  உணவை வீண் ஆக்குவதும் தவறு,  சிலர் லாப நோக்கிற்காக வீட்டில் தயார் செய்வதும், சுவை இல்லாத உணவை பரிமாறுவதும் தவறு.  


குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணை மற்றும் விலை பட்டியல்  ஒவ்வொரு மாவட்டத்திலும் மாறும், மற்றும் விழா காலங்களில் மாறும்.  தற்போது நீங்கள் யோசிக்கலாம், சிலர் 1500, 1000 என்று அனுமதி சீட்டின் விலை இருக்கிறது என்று.  30 பேருக்கு குறைவாக வருகிற பொது ஸ்டூடியோ வாடகை அப்படியே தான் இருக்கும்,  மற்ற விஷயங்கள் எண்ணிக்கையின் பேரில் குறைந்தாலும்,  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மெனகெடுதல் மற்றும் அலைச்சல் அதற்கான உழைப்பு அத்தனையும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.  எனக்கு தெரிந்து பலர் புக்கிங் ஆகாமல் சொந்த பணத்தில் இருந்தும் செலவழித்து உள்ளார்கள்.  எனவே யாருக்கும் பாதகம் இல்லாமல்  ஒரு நிகழ்வு நடைபெற, இது சம்பந்தமான  எந்த ஆலோசனை வேண்டும் என்றாலும் எனக்கு மெசேஜ் செய்யலாம். 

நன்றி 

Meetup Event Cost Breakdown

Item Details Amount (Rs.)
Studio Charges Rs.600 x 8 hrs 4,800
Food Charges Rs.150 x 30 plates 4,500
Tea & Snacks Rs.20 x 2 times x 30 1,200
Certificates Rs.25 x 30 750
Momento Rs.125 x 30 3,750
Banner Printing 8x4 = 32 sq.ft x Rs.30 1,000
Design Charges Minimum Design Fee 500
Total Cost (With Certificate & Momento) 16,500
Per Ticket (30 people) Rs.550
Total Without Certificate & Momento 12,000
Per Ticket Without Certificate & Momento Rs.400


Post a Comment

أحدث أقدم